மைதா – ரவா ஸ்வீட் பால்ஸ்

தேவையானவை :

மைதா – ஒரு கப்,

எண்ணெய் – கால் கப்,

சமையல் சோடா – அரை டீஸ்பூன்,

ரவை – 3 டேபிள்ஸ்பூன்,

சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

கேசரி பவுடர் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

 

செய்முறை:

பொரிப்பதற்கான எண்ணெயைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

This entry was posted in சாதா ஸ்வீட்ஸ் and tagged . Bookmark the permalink.

Leave a comment