பக்கர்வாடி

011b

தேவையானவை:

  • கடலை மாவு – ஒரு கப்,
  • சோள மாவு (அ) மைதா மாவு – அரை கப்,
  • புளித் தண்ணீர் – அரை கப்,
  • நெய் (அ) வனஸ்பதி – கால் கப்,
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பூரணத்துக்கு:

  1. கொப்பரை துருவல் – ஒரு கப்,
  2. வெள்ளை எள் – கால் கப்,
  3. கசகசா – கால் கப்,
  4. சர்க்கரை – 2 டீஸ்பூன்,
  5. மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
  6. கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
  7. ஏலக்காய், கிராம்பு பட்டை – தலா ஒன்று (பொடித்துக் கொள்ளவும்),
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்,
  9. உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சோள மாவு (அ) மைதா மாவு, கடலை மாவு, நெய் (அ) வனஸ்பதி மற்றும் உப்பை தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஊற வைக்கவும். இதுதான் மேல் மாவு. கடாயை காய வைத்து கொப்பரைத் துருவல், கசகசா, எள் மூன்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

இந்த பொடியுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பொடித்த ஏலக்காய் – கிராம்பு – பட்டைத் தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாகக் கலக்கவும் பூரணம் தயார்.

பிசைந்து வைத்திருக்கும் மேல் மாவிலிருந்து சிறிதளவு எடுத்து சப்பாத்தி போல தேய்க்கவும் அதன் மேல் புளித் தண்ணீரை தெளித்து தடவவும்.

இப்போது தயாரித்து வைத்துள்ள பூரணத்திலிருந்து சிறிதளவு எடுத்து சப்பாத்தியில் பரப்பவும். சப்பாத்தியை பாய் போல் சுருட்டி, சிறுசிறு துண்டுகளாக ‘கட்’ செய்து, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

This entry was posted in காரம் and tagged . Bookmark the permalink.

Leave a comment