தூத் பேடா

தேவையானவை:
ஸ்வீட் இல்லாத கோவா – அரை கிலோ
மில்க்மெய்ட் – 100 கிராம்
சர்க்கரை – 250 கிராம்
நெய் – 100 கிராம்
பாதாம், பிஸ்தா, முந்திரி – சிறிதளவு
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை


செய்முறை:
அடுப்பில் நான்ஸ்டிக் பேனை வைத்து நெய் ஊற்றி உருகியதும், மில்க்மெய்ட், சர்க்கரை மற்றும் கோவாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். தீயை மிதமாக்கி கலவை கட்டி விழாமல், மேலும் நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். கலவை ஸ்மூத்தான பேஸ்ட்டாக மாறி நாம் ஊற்றிய நெய் வெளியில் பிரிந்து வரும்போது இறக்கவும். கடையில் கிடைக்கும் ‘தூத் பேடா’ அச்சில் சிறிது நெய் தடவி கலவையை அதில் ஊற்றி, பாதாம், முந்திரி, பிஸ்தா தூவி ஆறவிட்டு எடுத்துப் பரிமாறவும். அச்சு கிடைக்காதவர்கள் ஒரு நெய் தடவிய ப்ளேட்டில் கலவையை ஊற்றி ஆறியதும், வட்டமான ஃபுட் கட்டரால் வெட்டி துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

This entry was posted in பால் ஸ்வீட்ஸ் and tagged . Bookmark the permalink.

Leave a comment