ஜவ்வரிசி – வெல்ல லட்டு

தேவையானவை:

ஜவ்வரிசி – ஒரு கப்,

வெல்லத்தூள் – முக்கால் கப்,

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,

நெய் – கால் கப்,

முந்திரி – திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு,ஜவ்வரிசியை மிதமான தீயில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். நன்றாக ஆறியதும், மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

இதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, மீதமுள்ள நெய்யில் முந்திரி – திராட்சையை வறுத்து அதில் சேர்த்துக் கலந்து, சிறிய சிறிய லட்டுகளாக பிடிக்கவும்.

This entry was posted in சாதா ஸ்வீட்ஸ் and tagged . Bookmark the permalink.

Leave a comment